ஆவடி மாநகராட்சியில் முதல் மேயர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போது ஆவடி மாநகராட்சி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் மேயர் பதவி யாருக்கு என்று இரு கட்சியினர் இடையே போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் வருகின்ற 19.2.2022 அன்று நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் 28.01.2022 வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டு 22.02.2022 வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இது நாள் வரை வேட்பு மனு தாக்கல் செய்த வர்கள் இன்னும் செய்ய இருக்கும் வேட்பாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஆவடி மாநகராட்சியில் வேட்பாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் தங்கள் மனுவினை ஆய்வு செய்ய 05.02.2022 சனிக்கிழமை நடைபெறும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் திரும்பும் பெரும் நாளாக 07.02.2022 திங்கட்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்குமாறு அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறை மேயர் பதவியை திமுக தக்க வைக்க வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. அதிமுக இதில் நிலைபாடு என்ன என்பது பொதுமக்கள் மத்தியில் இன்று வரை தெரியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது... மிக விரைவில் அதிமுகவினர் விரைவாக செயல்பட்டு வாக்குகள் பெற்று வெற்றி பெற தீவிரமாக செயல்பட வேண்டுமென்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
No comments
Thank you for your comments