73வது குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்
கோயம்புத்தூர் :
கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் இன்று (26.01.2022) நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, வண்ண பலூன்கள் மற்றும் சமாதான வெண்புறாக்களை வானில் பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சாந்திமதி அசோகன், கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், உதவி ஆட்சியர்(பயிற்சி)சரண்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிசந்திரன், இளங்கோ, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, 111 காவல்துறை அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், சிறப்பாக பணியாற்றிய 305 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
கொரோனா தொற்றால் நிலவும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் வீட்டிலேயே, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின விழாவை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments