2020-21 ஆம் ஆண்டில் நிலையான விலையில் 3.4 சதவிகிதம் சாதகமான வளர்ச்சியைப் பெற்ற ஒரே துறை விவசாயம்...
கோவை:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 73வது குடியரசு தினவிழா இன்று (26-01-2022) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தரும், பதிவாளருமான, முனைவர் அ. சு. கிருட்டிண மூர்த்தி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவில் உரையாற்றினார்.
நமது இந்திய தேசத்தின் தலைவர்களின் தியாகங்களை செயல் துணைவேந்தர் தமது உரையில் நினைவு கூர்ந்தார். வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் அவற்றில் உள்ள லாபத்தை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதற்கு முக்கிய காரணியாக உள்ள விவசாயிகளின் உழைப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். தற்போதுள்ள கோவிட் 19 சூழ்நிலையில் மற்ற அனைத்து தொழில்களும் முடங்கிய போதும் வேளாண் தொழிலின் வளர்ச்சி பாரட்டுகுரியது. விவசாய சமூகத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்வதன் மூலம் 2020-21 ஆம் ஆண்டில் நிலையான விலையில் 3.4 சதவிகிதம் சாதகமான வளர்ச்சியைப் பெற்ற ஒரே துறையாக விவசாயத்தை உருவாக்கியது.
2019-20ஆம் ஆண்டில் 17.8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 2020-21 ஆம் ஆண்டில் 19.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2003-04ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 20 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய்க்கு மத்தியிலும், விவசாயத் துறை அதன் சாதனையை எட்டியது.
இந்த சாதனையை வேளாண் பெருமக்களின் மகத்தான பங்களிப்பாலும், வேளாண் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் சாத்தியமாயிற்று என்று கூறினார். அகில இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பசுமை மற்றும் தூய்மை வளாக விருது, முதுநிலை பட்டப்படிப்பு ஊக்கத் தொகை விருது பெற்றமைக்கு வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் உழைப்பை பாராட்டினார். தாவர நோயியல் துறையில் 2 M.Sc. மற்றும் 3 Ph.D. உள்ளடக்கிய ஐந்து மாணவர்கள் புதுதில்லியின் இந்தோகனடியன் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் நிதியுதவியுடன் MITACS திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நானோ தொழில்நுட்பத்தில் மதிப்புமிக்க பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை இரண்டு மாணவர்கள் பெற்றுளனர். 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ICAR JRF தேர்வில், பல்கலைக்கழக மாணவர்களில் 69 பேர் கல்வி உதவித்தொகையை பெற்றனர்.
மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தரவரிசையில் பல்கலைக்கழகம் எட்டாவது இடத்தைத் தக்கவைத்து, தென்னிந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநில வேளாண் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்ததை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள். இந்த முழு நிகழச்சியானது முதன்மையர் (மாணவர்கள் நலன்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
No comments
Thank you for your comments