Breaking News

ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால் பயணிகள், தொழிலாளர்கள் அவதி....

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால் காஞ்சிபுரத்தில் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள், தொழிலாளர்கள் அவதி...

கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தென்னக ரயில்வே நிர்வாகம் ரயில் பயணம் செய்ய கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் அவசியம் என பயணிகளிடம் வற்புறுத்தி திருப்பி அனுப்பி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம், செல்லும் பயணிகள் ரயில் களில் நாள்தோறும் அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும்,பயணிகள்,என பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாதம் தோறும் பயன்படுத்தும் சீசன் டிக்கட் எடுக்கவும், நாள்தோறும் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வரும் பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்தும், ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். 

மேலும் இது குறித்து நிலையான அறிவிப்பு ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் ஏராளமானோர் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத நிலையில் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments

Thank you for your comments