Breaking News

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஐஎச்யூ பிரான்சில் கண்டுபிடிப்பு - B.1.640.2

புதிய உருமாறிய கரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆப்பிரிக்க நாடான காமரூன் நாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் இந்த தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.எச்.யூ மெடிட்டேரனி இன்ஃபெஇன் (IHU Mediterraneen Infection)  நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்த புதிய ஒரு உருமாறிய கொரோனா வைரஸை கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இதற்கு தங்கள் நிறுவனத்தின் முதல் பகுதி பெயரான ஐஎச்யூ வை சூட்டியுள்ளனர். மரபணு மாற்ற அடிப்படையில் இதற்கு B.1.640.2 என்று பெயர் சூட்டியுள்ளனர். 



பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 12 பேரிடம் மட்டுமே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஐஎச்யூ வை இன்னும் ஆய்வு செய்யவில்லை. அதனை உருமாறிய கொரோன வைரஸ் என்றும் அறிவிக்கவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூட ஐஎச்யூ  பற்றிய பேச்சு இல்லை.


No comments

Thank you for your comments