Breaking News

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து.. 2 பேர் உயிரிழப்பு.. உரிமையாளர் கைது

விருதுநகர்:

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில்பட்டி பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, வழக்கம் போல் மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வினால், பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில்,ஆறுமுகம் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த, தீயணைப்பு & மீட்புப் பணித்துறையினர் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படுகாயமடைந்த தெய்வேந்திரன் என்பவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், குபேந்திரன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு தொழிலாளி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments