தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய 21 நோய்கள் பட்டியல் வெளியீடு ... உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா:
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து செயல்படும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் காணப்படும் தொற்று நோய்கள் மற்றும் அதன் தடுப்பு வழிகள் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய 21 நோய்களின் பட்டியலை தமது ட்விட்டர் பக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காலரா, டிஃப்தீரியா, எபோலா, கல்லீரல் அலர்ச்சி நோய், தட்டம்மை, மூளைக்காய்ச்சல், நிமோனியா, போலியோ, டைபாய்டு, வெரிசெல்லா உள்பட 21 நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுகாதார மையங்களையும், பணியாளர்களை அணுகி தடுப்பூசி குறித்த விபரங்களை உறுதி செய்து, உங்களையும், உங்கள் குடும்பத்தினரையம் காத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Vaccine-preventable diseases include:
— World Health Organization (WHO) (@WHO) January 28, 2022
Cervical cancer
Cholera
Diphtheria
Ebola
Hep B
Influenza
Japanese encephalitis
Measles
Meningitis
Mumps
Pertussis
Pneumonia
Polio
Rabies
Rotavirus
Rubella
Tetanus
Typhoid
Varicella
Yellow Fever
Yes, #VaccinesWork! pic.twitter.com/05BAZ867aO
No comments
Thank you for your comments