Breaking News

2வது வாரமாக இன்று முழு ஊரடங்கு... காணும் பொங்கலன்று வெறிசோடிய சாலைகள்

 காஞ்சிபுரம்

2 வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

மாவட்ட முழுவதும்  1100  போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய சாலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று திடீர் சோதனை செய்து வருகிறார்.

 தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்து உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தி அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1100 போலீசார் பாதுகாப்பு பணியை கொண்டு தீவிர வாகன சோதனை களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் முக்கிய முக்கிய சாலைகள் ஆன காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் சாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு தேவையின்றி சுற்றி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதைத் கண்காணித்து வருகின்றனர்.



No comments

Thank you for your comments