எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் விழா... 1000 பேருக்கு அன்னதானம்
காஞ்சிபுரம் :
சத்துணவு தந்த சரித்திர நாயகன் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் விழாவை போற்றும் வகையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம், தென்னை மரக்கன்றுகளை வழங்கினார் சமூக ஆர்வலர் முத்தியால்பேட்டை ஆர்வி ரஞ்சித்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆர்.வி.ரஞ்சித் குமார், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் பக்தராகவும் இருந்து வருபவர்.
எம்ஜிஆரின் சமுதாய பணியின் பாணியில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். இவர் முன்னாள் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இருந்துள்ளார்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும், பக்தராகவும் உள்ள ஆர்வி. ரஞ்சித்குமார், சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்திய சரித்திர நாயகன் எம்ஜிஆரின் நினைவினைப் போற்றும் வகையில் அவரது 105- வது பிறந்த நாளான இன்று முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் முத்தியால்பேட்டை, களியனூர் கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களுக்கு இரண்டு தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி அம்மாள் வழக்கறிஞர் ஆர்வி உதயன், டில்லி,பாபு,சேட்டு, நத்தப்பேட்டை வஜ்ஜிரவேல், ஏரிவாய் கோபால், வேலு, வள்ளுவபாக்கம் மாணிக்கவேல், எஸ் ஆர் சதீஷ்குமார், பன்னீர், அஜித், மதன், பாலு, முத்தியால்பேட்டை இளங்கோ உள்ளிட்ட கிராம பிரமுகர்களும், மகளிர் குழுவினரும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments