Breaking News

சென்னையில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு

சென்னை,  ஜன.5-

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்தெருக்கள் முழுக்க மூடப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,728 ஆக உள்ளது. சென்னையில் மேலும் திங்கள்ன்று 876 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று நிலவரப்படி 6 பேர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவால் உயிரிழந்தனர். 662 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னையில் சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது.. கடந்த 10 நாட்களில் சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 146 லிருந்து ஞாயிறன்று 776-ஆகவும் திங்களன்று 876ஆகவும் அதிகரித்துள்ளது. இது 5 மடங்கு உயர்வாகும்.

சென்னை, செங்கலபட்டு கோயம்புத்தூரில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் கொரானோ நோயாளிகள் எண்ணிக்கை 10364. இதில் கிட்டத்தட்ட சரிபாதி சென்னையில் மட்டும் உள்ளனர். சென்னையில் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4259. 

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

170 தெருக்களில் 3க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

86 தெருக்களில் 4 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

51 தெருக்களில் 5 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

988 தெருக்களில் 3க்கும் குறைவான கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

சென்னையில் மொத்தமாக 3486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொரானா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் வரும் என்று தெரிகிறது.

No comments

Thank you for your comments