ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் நள்ளிரவில் ஆய்வு செய்த அமைச்சர்
ஈரோடு, ஜன.5-
ஈரோடு மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் வரை செல்லும் சாலை மிக முக்கியமான சாலையாகும்.
இந்த சாலையில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. இதனையடுத்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிட்டார்.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments