காட்பாடி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல்
காட்பாடி :
காட்பாடி ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கடத்தவிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காட்பாடி ரயில்வே போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 02.00 மணிக்கு காட்பாடி இரயில் நிலையம் வந்த தன்பாத்தில் இருந்து அலப்புழா சென்ற விரைவு இரயிலில் பெட்டி எண்S-6 கஞ்சா கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஒரு கிலோ அடங்கிய 12 பாக்கட்டுகளில் கடத்திச்செல்லப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் பறிமுதல் செய்தனர். மேலும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திர கன்ஹார் சுனில் துமானியன், மனோஜ் பில் ஆகிய 3 பேரை கைது செய்து காட்பாடி இருப்புப்பாதை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
No comments
Thank you for your comments