07-01-2022 அன்று கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் ஏலம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்கள் காலவதியானதால் காவல்துறை தலைமை அலுவலக உத்தரவின்பேரில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்களான 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 19 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 46 வாகனங்களை மதிப்பீடு செய்யப்பட்டன.
அவ்வாகனங்களை ஏலம் விடப்பட்டு அதன்மூலம் வரும் தொகையினை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வரும் 07.01.2022 அன்று காலை 10.00 மணி முதல் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஏலம் விடப்படவிருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்குபெற இருப்போர் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்பு தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 % மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 % உடனடியாக செலுத்திவிட வேண்டும்.
இந்த ஏலத்தில் பங்குபெறவிருப்போர் தவறாது தங்களது ஆதார் கார்டு அசல் மற்றும் நகலை உடன் கொண்டுவரவேண்டும்.
No comments
Thank you for your comments