Breaking News

TNPSC 2022-ம் ஆண்டு தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு

சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு தேர்வுகளுக்கான உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. 

அதில், 2022-ம் ஆண்டு முழுவதும் எந்தெந்தெந்த தேர்வுகளுக்கு எந்த மாதம் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது என்ற உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள் 👉TNPSC போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


வரிசை எண்

பதவி /  தேர்வின் பெயர்

அறிக்கை வெளியிட்படும் மாதம்

1

கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர்

ஜனவரி

2

 இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1

ஜனவரி

3

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II

பிப்ரவரி

4

நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர்

பிப்ரவரி

5

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்

மார்ச்

6

சமூகப் பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்

மார்ச்

7

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV

மார்ச்

8

சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர்

ஏப்ரல்

9

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - III

ஏப்ரல்

10

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IV

ஏப்ரல்

11

 தொல்லியல்துறையில் இளநிலை கல்வெட்டாய்வாளர்

மே

12

சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர்

மே

13

தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி

மே

14

தொகுதி- V A பணிகள்

ஜூன்

15

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I

ஜூன்

16

மருத்துவக் கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில் தொழில்முறை ஆலோசகர்

ஜூன்

17

வனத்துறையில் வனத் தொழில் பழகுநர்

ஜூலை

18

தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர்

ஜூலை

19

தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர்

ஜூலை

20

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III

ஆகஸ்ட்

21

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வு

ஆகஸ்ட்

22

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர்

செப்டம்பர்

23

பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்

செப்டம்பர்

24

பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர்

செப்டம்பர்

25

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர்

அக்டோபர்

26

கல்லூரி கல்வித்துறையில் நிதியாளர்

அக்டோபர்

27

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர்

நவம்பர்

28

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர்

நவம்பர்

29

வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர்

நவம்பர்

30

தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர்

டிசம்பர்

31

ஒருங்கிணைந்த நூலகர் பணிகள்

டிசம்பர்

32

தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர்

டிசம்பர்





No comments

Thank you for your comments