Breaking News

பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர் வீட்டில் திருட்டு... வாலாஜாபாத் போலீசார் விசாரணை...

காஞ்சிபுரம் :

 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.

என்.ஆர்.பழனி வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார்.

புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் அறையில் கடந்த ஒரு வருட காலமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது.

கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில் பழைய வீட்டினை அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் இரண்டு நாட்களாக  குடும்பத்தினர் தங்கி உள்ளனர்.

இந் நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப் பொருட்கள்  3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம்,மற்றும்  வீட்டு  கிராப் கிரகப்பிரவேசத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், அளித்த பரிசுப் பொருட்களும் மொழிவைத்த கவர்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலையில் பழனி பழைய வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பீரோவில் இருந்து பணம் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.








No comments

Thank you for your comments