மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை
புதுடெல்லி, டிச.31-
ஜிஎஸ்டி வரியினால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்கான வசூல் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய திட்டச் செலவுகளில் மத்திய அரசின் பங்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும் எல்லா மாநில அரசுகளும் வலியுறுத்தியுள்ளன.
2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (சட்டமன்றத்துடன் கூடிய) நிதி அமைச்சர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
மத்திய நிதி இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்ற மத்திய நிதி செயலாளர், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். மிக மோசமான பெருந்தொற்று காலத்தின் போது தங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கடன் வாங்கும் வரம்புகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு மீண்டும் கடன்களை வழங்குதல், மூலதன செலவினங் களுக்கான சிறப்பு உதவி உள்ளிட்ட ஆதரவிற்காக மத்திய நிதி அமைச்சருக்கு பெரும்பாலான பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக நிதி அமைச்சர் பி. தியாகராஜன் மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் செஸ் வசூல் திட்டத்தை குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மாநிலங்களில் அமல் செய்யப்படும் மத்திய திட்டங்களில் மத்திய அரசின் செலவு தொகையை உயர்த்தப்பட வேண்டும் என்றும் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி வரியினால் சத்தீஸ்கர் மாநிலத்தின் வரி வருமானம் 5 ஆயிரம் கோடி அளவில் குறைந்துவிட்டது எனவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி இறப்பிற்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வேண்டிக் கொண்டார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் சுபாஷ் கார்க், மேற்கு வங்காளம் ஐக்கிய மாநிலங்கள் இலவச திட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் நிதி அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்படும் பொழுது கொரானோ வைரஸ் தொற்று பற்றிய தகவல் எதுவும் இல்லை. மாநில அரசுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதனால் ஜிஎஸ்டி வரி இழப்பினை ஈடு செய்யும் திட்டம் தொடர வேண்டும் மத்தியத் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பு அதிகப்படுத்த பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பட்ஜெட் உரையில் சேர்ப்பதற்கான பல ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சருக்கு பங்கேற்பாளர்கள் வழங்கினர். 2022-23 மத்திய பட்ஜெட் குறித்த பங்கேற்பாளர்களின் உள்ளீடுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்ததோடு, ஒவ்வொரு முன்மொழிவையும் ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.
No comments
Thank you for your comments