பட்டு பூங்காவில் தறி சோதனை ஓட்டம் ஆய்வு...
காஞ்சிபுரம் :
கீழ்கதிர்பூர் பட்டு பூங்காவில் தறி சோதனை ஓட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர்...
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டு ஜவுளி மேம்பாட்டு துறை மற்றும் தமிழக கைத்தறி துறை பங்களிப்பு உடன் 90 கோடி மதிப்பீட்டில் பட்டு பூங்கா திட்டம் துவக்க அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணி தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பணிகளை துரிதப்படுத்த தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அண்ணா பிறந்த தினமன்று பட்டுப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தனர்.
இந்நிலையில் இதற்கான தறி கூடம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள தறியில் நெசவாளர்கள் சோதனை முறையில் சேலை நெய்து வருகிறார். மேலும் தறிகூடம் மற்றும் கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ளது.
மொத்தம் 24 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன 22 அரங்குகளில் 96 தறி கூடங்களும் மீதமுள்ள இரண்டு அரங்குகளில் 24 தறி கூடங்களும் அமைய உள்ளன சுமார் 2400 தறிகளில் நெசவாளர்கள் சேலை நெய்ய இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் தறி இயந்திரத்தை சோதனை ஓட்டத்தில் நெசவாளர்கள் தற்போது பட்டு சேலையை நெய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சோதனை தறி ஓட்டம் நடைபெற்று வருவதை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்,நெசவாளர்களிடம் நெய்யப்பட்டுவரும் பட்டு புடவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டாலின்,ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments