Breaking News

அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் ஜெ., படம் அகற்றம்... அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மா திருவுருவப் படத்தை  அகற்றிய  திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, 

மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களகாட்டூர் ராஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். டி. சேகர், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் உள்ளனர்.




No comments

Thank you for your comments