Breaking News

‘நிம்மதி இல்லம்” முதியோர் இல்லத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் - அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்

வேலூர், டிச.22-

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள நிம்மதி இல்லத்தில் போர் விதவையர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் தங்கி பயன்பெற போர் விதவையர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு கிளை அவர்களால் நிம்மதி என்னும் முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. நிம்மதி இல்லத்தில் தரை (ம) முதல் தளத்துடன் சுமார் 50பேர் தங்கும் அளவிலான இரண்டு விடுதி அறைகள், உடற்பயிற்சி சிகிச்சை மையம், சமையலறை மற்றும் உணவருந்தும் அறை ஆகியவை தரைத்தளத்திலும், பொழுது போக்கு அறை, கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

இவ்வில்லத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள போர் விதவையர் மற்றும் வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் நிம்மதி இல்லத்தில் தங்கி பயனடைய விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

இயக்குநர் (திட்டங்கள்) போர் விதவையர்கள் நலச்சங்கம்,

20, ராஜா தெரு நீட்சி, 

ராஜா அண்ணாமலைபுரம், 

சென்னை - 600 028.

தொலைபேசி எண். 044-2464 0092.

இச்சலுகையினை பயன்படுத்தி பயனடையுமாறு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் கைம்பெண்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்  நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்  தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments