Breaking News

நற்பவி மருத்துவமனையின் 6ம் ஆண்டு துவக்க விழா

காஞ்சிபுரம், டிச.22-

காஞ்சிபுரம் நற்பவி மருத்துவமனையின் 6ம் ஆண்டு துவக்க விழாவில் கலைமாமணி சுகி சிவம் சிறப்புரையாற்றினார்.

காஞ்சிபுரம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எம்எம் கிராண்ட் மகாலில் காஞ்சிபுரம் நற்பவி மருத்துவமனையின் 6ம் ஆண்டு துவக்க விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சொற்பொழிவாளர் கலைமாமணி சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் வா என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

இதில் சிறப்பு விருந்தினர்களாக மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன். ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் குமரன் மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் மருத்துவர்கள் தொழிலதிபர்கள் வாடிக்கையாளர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரக நலன், கண்நலன், நீரிழிவுநோய் சிறப்பு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.




No comments

Thank you for your comments