ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீடிப்பு
புதுடெல்லி, டிச.31-
2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டு அறிக்கை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மறைமுக வரிகளுக்கான மத்திய போர்டு புதன்கிழமை இரவு ட்வீட்டரில் அறிவிப்பு செய்துள்ளது.
ஆண்டறிக்கை ஜி எஸ் டி ஆர் 9 படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர வரவு-செலவுக் கணக்குக்கும் ஜி எஸ் டி ஆர் கணக்குக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று விண்ணப்பதாரர் குறிப்பிடும் சொந்த சான்றிதழையும் ஜி எஸ் டி ஆர் 9சி படிவத்தில் இணைத்து அனுப்ப வேண்டும்.
ரூபாய் 2 கோடிக்கு மேல் வருடாந்திர விற்று வரவு உடைய வரி செலுத்துவோர் மட்டுமே வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து கோடிக்கு மேல் வரவு உடையவர்கள் மட்டுமே சொந்த சான்றிதழை இணைத்து ஜிஎஸ்டி ஆர் 9சி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments