பருவநிலை மாற்றம் தொழில்நுட்ப வளர்ச்சியால் கட்டுப்படுத்த முடியுமா முடியாதா விவாதப் போட்டி
காஞ்சிபுரம்,டிச.05
பருவநிலை மாற்றம் தொழில்நுட்ப வளர்ச்சியால் கட்டுப்படுத்த முடியுமா முடியாதா விவாதப் போட்டி சேவியர் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் & எண்டர்பினர்ஷிப் கல்லூரியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இயங்கிவரும் சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் என்டர்பினஷிப் கல்லூரியில் பிரம்மாண்டமான பருவநிலை மாற்றம் தொழில்நுட்ப வளர்ச்சியால் கட்டுப்படுத்த முடியுமா முடியாதா என்ற விவாத போட்டி நடைபெற்றது.
இந்தப்போட்டியில் கோவை, சென்னை மதுரை மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று இறுதி சுற்றுக்கு கோவையில் 2 சென்னையில் 2 மதுரையில் 2 மற்றும் விசாகப்பட்டினத்தில் மூன்று போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு இன்று விவாதப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் இயக்குனர் டேவிட் ஜவகர், முதல்வர் பேராசிரியர் சுரேஷ்குமார், கல்லூரியின் தலைவர் பேராசிரியர் பிலிப் ஆகியோர் தலைமையில் சிறப்பு நடுவர்களாக லயோலா மேனேஜ்மென்ட் கல்லூரி பேராசிரியர் மற்றும் முதல்வர் எம்.வி.சேவியர், காஞ்சி காமகோடி குழந்தைகள் தொண்டு மருத்துவமனை மருத்துவர் சாரா சாண்டி மற்றும் ஹுண்டாய் மனிதவள மேலாளர் பியர்லினா பரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று விவாதப் போட்டி நடைபெற்றது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அணிகளும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு அணிகளும் அடுத்த பிரம்மாண்ட இறுதிப்போட்டிக்கு தென்னிந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments
Thank you for your comments