கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம்... புதிய நிர்வாகிகள் தேர்வு...
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காட்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வேலூர் மாவட்ட சங்கத்தின் துணைத் தலைவர் அன்பரசன் மற்றும் பிரச்சார செயலாளர் விநாயகம் முன்னிலையில் சங்க கூட்டம் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிவேதா குமாரி, செயலாளர் கோபிநாதன், துணைச் செயலாளர் வடிவேல், பொருளாளர் இளங்கோவன், வட்ட பிரச்சாரச் செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
No comments
Thank you for your comments