ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள புதிய 11 ஆயிரம் வாட்ஸ் மின்னூட்டி திறப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள புதிய 11 ஆயிரம் வாட்ஸ் மின்னூட்டியை திமுக தெற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மின்சார துணை மின் நிலையத்தில் 11 ஆயிரம் வாட்ஸ் காமாட்சியம்மன் சொசைட்டி பீடர் டிரான்ஸ்பார்மரை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் திறந்து வைத்தார்.
புதிய டிரான்ஸ்பார்மரானது காஞ்சிபுரம் மாநகராட்சி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 மற்றும் 46 வார்டுகளில் ஏற்படும் மின் கசிவு பிரச்சனையை போக்கும் வகையில் செயல்படும் என்று மின்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் எடுத்துரைத்தனர்.
இந்நிகச்சியில், திமுக மாவட்ட பிரதிநிதி விசுவநாதன், காஞ்சிபுரம் வடக்கு செயற் பொறியாளர் சரவணன் தங்கம், காஞ்சிபுரம் நகரம் உதவி செயற்பொறியாளர் இளையராஜன், காஞ்சிபுரம் துணை மின் நிலையம் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, ஓரிக்கை இளநிலை பொறியாளர் சிவானந்தம் மற்றும் இளநிலை பொறியாளர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments