கொப்பரை தேங்காய் விலை உயா்வு! - விவசாயிகள் மகிழ்ச்சி!
நாமக்கல், டிச. 25-
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 145 க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா்.
தரத்துக்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 3 ஆயிரத்து 834 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன.
அதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.109.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 84.19-க்கும், சராசரியாக ரூ. 93.10-க்கும் விற்பனையாகின.
டிசம்பர் 23 ஆம்தேதி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரத்து 265 கிலோ கொப்பரை தேங்காய்கள் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.103-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 85.99-க்கும், சராசரியாக ரூ. 96.49-க்கும் விற்கப்பட்டன.
மொத்தம் ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 145க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் விலை உயா்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
No comments
Thank you for your comments