வேலூர் அருகே மீண்டும் மீண்டும் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9:30 மணியளவில் அடுத்தடுத்து 3 முறை லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர்.
பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவடடாரப்பகுதியில் மீண்டும் மதியம் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே 3-வது முறையாக காலையில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் நீடித்த நில அதிர்வினை உணர்ந்தோம். மேலும் நில அதிர்வை உணர்ந்த பலரும் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர் என்று தெரிவித்தனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் மக்களிடையே பெரும் பீதியைஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments