Breaking News

ஆம்பூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஆம்பூர்,  டிச.25-

ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சோபனா இவரது கணவர் கோவிந்தராஜ் வயது (40) சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் LED service centre செய்யும் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் அவரது கடைக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத கோவில் பகுதியில் கோவிந்தராஜை, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் வெங்கடேசன்(36) என்பவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

வெங்கடேசன் என்பவர் கள்ளத்தனமாக கஞ்சா வியாபாரம் செய்ததாக ஆம்பூர் டவுன் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் ஜாமீனில் வந்தவர்,  இவர்களுக்கு எற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது  

கொலை செய்து விட்டு ஆட்டோ மூலம் ஆம்பூர் பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏரி திருப்பத்தூர் வழியாக ஓசூர் சென்று தலைமறைவானார். 



இதையடுத்து,  ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில் இன்று மதியம் 2 மணிக்கு பஸ்ஸில் வந்தபோது ஆம்பூர் தாலுக்கா போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் .

மேலும் அவருடன் கூட்டாளிகள் யார் யார் என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் 

கோவிந்தராஜ் கொலை செய்த வெங்கடேசன் தற்போது பல்வேறு விதமான வாக்குமூலம் கொடுத்து வருகிறார், அதில்,  நான் எந்த தவறும் செய்யவில்லை திருந்தி வாழ வேண்டும் அதற்கான சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டேன் கிராம நிர்வாக அலுவலர் கொடுக்க வில்லை ஊராட்சி மன்ற தலைவரிடம் போய் வாங்கிக் கொள்ளாம் என நினைத்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் என்னுடைய கணவர் கோவிந்த் இடம் கேட்ட பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது வாக்கு வாதம் முற்றிய நிலையில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நெஞ்சில் குத்தி விட்டு ஆட்டோ மூலம் தப்பி ஓடினேன் என்று முதல்கட்ட விசாரணையில் கூறியுள்ளார் 

ஆம்பூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்னும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments