Breaking News

ஒமைக்கிரான் கொரோனாவிலிருந்து மக்கள் விடுப்பட கிருஸ்துமஸ் தினத்தில் பிரார்த்தனை

 காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் கிருஸ்துமஸ் தினத்தையொட்டி  திரளான கிருஸ்துவர்கள் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்கிரான்  கொரோனாவிலிருந்து மக்கள் விடுப்பட வேண்டியும், கொரோனா தொற்று முழுவதுமாக இவ் உலகை விட்டு அகல வேண்டியும் விடிய விடிய சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிருஸ்மஸ் தினத்தையொட்டி இன்று  தமிழகத்தில் உள்ள அனைத்து கிருஸ்துவ ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு கிருஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். 



ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய  பிராத்தனையில் இந்தாண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்தளவே கிறிஸ்தவர்கள்  கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றி முககவசம் அணிந்தவாறு பிராத்தனையில் ஈடுபட்டனர். 


அந்த வகையில்  காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலயத்தில் தற்போது உலலையே அச்சுறுத்தி வரும் ஒமைக்கிரான்  கொரோனாவிலிருந்து மக்கள் விடுப்பட வேண்டியும், கொரோனா தொற்று முழுவதுமாக இவ் உலகை விட்டு அகல வேண்டியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சிறப்பு கூட்டு  பிராத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  திரளான கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து கலந்துக் கொண்டு  இயேசு கிருஸ்துவிடம் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி விடிய விடிய தீவிர பிராத்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் மனித நேயம், கருணை, அன்பு , சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் விதமாக கிறிஸ்துவர்கள் கிருஸ்துமஸ் தினத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தாண்டும் கொரோனா பெருந்தொற்று  காரணமாக  குறைந்த அளவிலே  கிருஸ்துவர்கள் கலந்துக் கொண்டு பிராத்தனையில்  ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments