Breaking News

செங்கல்பட்டு காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி... சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் அமைதியாக போராடிக்கொண்டிருந்த பாக்ஸ்கான் பெண் தொழிலாளிகள் ஒரகடம் வடக்குபட்டு பகுதியில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பாக்ஸ்கான் போராளி மீது செங்கல்பட்டு காவல்துறை  காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துகுமார் செங்கல்பட்டு சிஐடியுமாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் உட்பட 80 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார்தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் தோழர் என் நந்தகோபால் தலமைகண்டன உரையாற்றிய தோழர்கள் சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கே.நேரு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் .சி.சங்கர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் மதுசூதனன் தோழர் வசந்தா, தோழர் .எம்.ஆறுமுகம், வி.சி.வப்பிரகாசம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்

No comments

Thank you for your comments