தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரூர், டிச.14:
அரூரில் தனியார் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், வேன்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது.
இதையடுத்து, அரூர்-சேலம் பிரதான சாலையில், நம்பிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.சிவக்குமார் தலைமையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கதவுகள், முதலூதவிப் பெட்டிகள், பேருந்துகளுக்கு தேவையான காப்பீடுகள், பிரேக் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் 300 வண்டிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிறிய அளவிலான குறைபாடுகள் தொடர்பாக 10 பேருந்துகள் திருப்பி அனுப்பினர். இதில், வருவாய் கோட்டாட்சியர் வே.முத்தையன், டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா, மாவட்ட கல்வி அலுவலர் (அரூர்) ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments