பரமத்தியில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி பாஜகவினர் ஆர்பாட்டம்!
நாமக்கல், டிச.14-
பரமத்தியில் உள்ள கோவிலின் வாகன நிறுத்துமிடத்தில் திமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அங்காளம்மன் கோவிலை ஒட்டி உள்ள வாகன நிறுத்துமிடத்தை திமுக நிர்வாகி ஆக்கிரமித்து கடை வைத்துள்ளது குறித்து பலமுறை மனு அளித்தும் ஆக்கிரமிப்பை அகற்றாத பரமத்தி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பரமத்தி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரியும், பரமத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்பட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அருண் தலைமையில், மாவட்ட மகளிரணி தலைவர் சத்யபானு வரவேற்புரையாற்றினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ.ஆர். காந்தி , தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்ற மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணன் நன்றியுரை ஆற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என கடந்த 13 ஆம்தேதியே நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து அடுத்து மூவ் நடக்கும் என்றார்.
No comments
Thank you for your comments