கோதவாடி குளம் நிரம்புவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - முன்னாள் இஸ்ரோ இயக்குநர்
கோவை:
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைபுரிந்த முன்னாள் இஸ்ரோ இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தனது குடும்பத்துடன் கோதவாடி குளத்தை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனது சொந்த ஊர் கோதவாடி ஆகும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோதவாடி குளம் நிரம்பும் நிலையில் உள்ளது.எனவே இதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நிலவில் நீரை கண்டுபிடித்ததை விட கோதவாடி குளம் நிரம்புவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குளத்திற்கு நீரை கொண்டு வருவதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எல்ஜி கம்பெனி இயக்குனர் சீனிவாசன், கௌசிகா நீர் கரங்கள் செல்வராஜ் திமுக பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் ஒன்றிய செயலாளர் கிரி கதிர்வேல் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ரத்தினசாமி குலம் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments