Breaking News

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

ஈரோடு, டிச.20-

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சுமார் 2 கோடி ரூபாய், தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

No comments

Thank you for your comments