Breaking News

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு

அரூர், டிச. 1: 

திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில், அரூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் புதன்கிழமை அணிவிக்கப்பட்டது.


திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் பிறந்த தினம் நவ.27 ஆம் தேதியாகும். அந்த தேதியில். அரூர் அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. 

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக முன்னாள் நகர செயலர் முல்லை ஆர்.என்.செழியன் தலைமையில் நடைபெற்றது. 


குழந்தைகளுக்கு தங்க மோதிரம், உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, போர்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திமுக தருமபுரி மாவட்ட செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் வழங்கினர்.

இதில், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விசுவநாதன், நகர பொறுப்பாளர் ஏ.சி.மோகன், இளைஞரணி நகர அமைப்பாளர் தீ.கோடீஸ்வரன், ஒன்றிய அமைப்பாளர் கே.சிவப்பிரகாச நேரு, ஒன்றிய செயலர்கள் ஆர்.வேடம்மாள், ஜி.சந்திரமோகன், வே.சௌந்தரராசு அரசு வழக்கறிஞர்கள் சரவணன்,  பொதிகை வேந்தன் சேகர் மருத்துவர்  சுரேஷ்குமார் திருமால்செல்வன் தமிழழகன் வின்னரசன், முல்லை ரவி   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

No comments

Thank you for your comments