Breaking News

நாமக்கல் நகராட்சி கமிஷனராக சுதா பொறுப்பேற்பு!

நாமக்கல், டிச. 2-

நாமக்கல் நகராட்சி கமிஷனராக சுதா பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாமக்கல் நகராட்சி கமிஷனராக இருந்த  பொன்னம்பலம்,  திடீரென சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். 

அவருக்கு பதிலாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பணியாற்றி வந்த சுதா, நாமக்கல் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி சுதா, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  

நாமக்கல் கமிஷனராக சுதா ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments