திருநங்கை, திருநம்பிக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு !
நாமக்கல், டிச.2-
நாமக்கல் மாவட்டத்தில், 2019-20-ஆம் கல்வி ஆண்டில், இளநிலைபட்டப்படிப்பில் சேர்ந்து, முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும், குறைந்தபட்சம், 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஒரு திருநம்பி மற்றும் ஒரு திருநங்கைக்கு உதவித்தொகையாக, தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் மதிப்பில், தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2வில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (மாணவர்கள், அரசு, அரசு உதவி பெறும் மாநகராட்சி, நகராட்சி, ஆதரவற்றோர் பள்ளிகளில் படித்தவர்களாக இருக்க வேண்டும். இளங்கலை பட்டபடிப்பு, கல்லூரியில் படித்து முதலாம் ஆண்டில் குறைந்தபட்சம், 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிசம்பர், 3க்குள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
கூடுதல் கட்டடம்,
கலெக்டர் அலுவலக வளாகம்,
அறை எண்-234,
தொலைபேசி எண்- 04286 299460,
நாமக்கல் மாவட்டம்
என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments