Breaking News

பக்தர்களை அனுமதிக்காமல் எளிமையாக நடைபெறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா

ஈரோடு:

கொரோனா பரவல் காரணமாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைப்படி குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல் எளிமையாக நடைபெற்றுவருகிறது...

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈரோடு கருங்கல்பாளயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் உள்ளன, இந்த கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும், அதன்படி நடப்பாண்டுக்கான குண்டம், தேர்த்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது . 

அதனைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து தினமும் திரளான பெண் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா  நடைபெற்று வருகிறது, கோயிலின் தலைமை பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி, அம்மனுக்கான நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, இதில் தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சின்ன மாரியம்மன் கோவில் வீதியில்  தேர் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் அம்மன் சிலை மீண்டும் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைப்படி குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் பக்தர்களை கோயில் நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை, குண்டம் மற்றும் தேரோட்டத்தில் பக்தர்களை அனுமதிக்காமல் எளிமையாக நடைபெற்று வருகிறது, இதனை தொடர்ந்து தற்போது கோயிலில் அம்மனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

No comments

Thank you for your comments