25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சியினர் நடத்தினர்.
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும் மேலும் 700 ஆயுள் கைதிகளை விடுதலை சம்மந்தமாக அரசாணையில் இஸ்லாமிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை புறக்கணிக்கும் எண்ணத்தோடு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய தேசிய லீக் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
No comments
Thank you for your comments