மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5ம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி மலர் தூவி மரியாதை
திருப்பூர்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் இன்று, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அவர்களின் வழியில், ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ். காளீஸ்வரன் அவர்களின் தலைமையில் மெட்ராத்தி, துங்காவி, காரத்தொழுவு, கடத்தூர், சோழமாதேவி, ஜோத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் மற்றும் கணியூர், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் அம்மா அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய, பேரூராட்சி கழக பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments