மக்கள் குறைதீர் கூட்டம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் (20.12.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம் கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments