Breaking News

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக அதிமுக எம்.எல்.ஏ மீது காவல் நிலையத்தில் புகார்

 தருமபுரி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகவும் மேலும், மு.க.ஸ்டாலினின் தாயார் குறித்தும் இழிவாக பேசிய நிலையில்  தமிழக முதல்வரை அவதூறாக பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரூர் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர் கே.ஜி.சரவணன், அரூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



No comments

Thank you for your comments