Breaking News

கல் குவாரிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்கம்... கருத்து கேட்பு கூட்டம் அறிவிப்பு

ஈரோடு:

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம், புதுதில்லி 14.09.2006 அன்று வெளியிட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி, 

File photo

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், சென்னம்பட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள, 

திரு. செ. மாதரசு,  கல்குவாரி (ச.எண்.170 பகுதி 4), 

திரு. செ. கோகுல்சந்தோஷ், கல்குவாரி (ச.எண்.170 பகுதி 3),  

திரு. கே. எஸ். செல்வராஜ், கல்குவாரி (ச.எண்.170 பகுதி 2) மற்றும் 

திரு. சீ. செல்வகுமார், கல்குவாரி (ச.எண்.170 பகுதி 1) 

ஆகிய கல் குவாரிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 28.12.2021  அன்று காலை 11.00 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், சென்னம்பட்டி கிராமம், சனி சந்தை, கொளத்தூர் சாலையில் அமைந்துள்ள தி/ள் கொங்கு திருமகள் திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இதற்கான அறிவிப்பு 19.11.2021 ஆம் நாளிட்ட நாளிதழ்களில் தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட கல்குவாரிகளுக்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீடு அறிக்கை, அதன் செயல்முறை திட்ட சுருக்கம் (ஆங்கிலம் மற்றும் தமிழ்), ஈரோடு மாவட்டத்தி ல்உள்ள பின்வரும் இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காகவும் / ஆய்வுக்காகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வைக்கப்பட்டுள்ளது.

1. மாவட்டஆட்சியர்அலுவலகம், ஈரோடுமாவட்டம், ஈரோடு.

2. மாவட்டபஞ்சாயத்துஅலுவலகம், ஈரோடு.

3. மாவட்டதொழில்மையம், ஈரோடு.

4. வட்டாட்சியர்அலுவலகம், அந்தியூர்வட்டம், ஈரோடுமாவட்டம்.

5. ஊராட்சிஒன்றியஅலுவலகம், அம்மாபேட்டை, ஈரோடுமாவட்டம்.

6. ஊராட்சிஅலுவலகம், சென்னம்பட்டிகிராமம்,அந்தியூர்வட்டம், ஈரோடுமாவட்டம்.

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

எனவே மேற்கண்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கல்குவாரிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பெருந்துறை) தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments