Breaking News

ம.புடையூர் அரசுபள்ளியில் மாணவர்களுக்கு சேர்மன் பரிசு வழங்கினார்.

கடலூர் :

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன்,பிடிஓக்கள் தண்டபாணி,சண்முகசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் தாவுத்அலி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய சேர்மன் கே.என்.டி சுகுணா சங்கர்,ஒன்றிய செயலாளர் அடரி சின்னசாமி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

இதில் துணை சேர்மன் கலைச்செல்வி செல்வராஜ்,ஆலம்பாடி கவுண்சிலர் சங்கர்,ஆவட்டி கவுண்சிலர் சிவமாலை சாமிதுரை,அக்ரி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments