வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கே.வி.குப்பம்:
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் மகன் பிச்சைமுத்து என்பவர் வட விரிஞ்சிபுரம் கிராம உதவியாளர் சரிதா என்பவரை தரக்குறைவாகவும் மரியாதை குறைவாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதை கண்டித்து கே.வி.குப்பம் வட்ட ஊழியர் சங்கத்தின் சங்க மாநில துணை தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கே.வி.குப்பம் வட்ட தலைவர் சண்முகம். வட்ட செயலாளர் கண்ணதாசன், வட்ட பொருளாளர் ரவி. மற்றும் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், குடியாத்தம். காட்பாடி. அணைக்கட்டு பகுதியில் இருந்து தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் திரலாக கலந்து கொண்டார்கள்
No comments
Thank you for your comments