வாட்ஸ் அப் குழுவில் அட்மின் கட்டுப்படுத்தலாம்... பொறுப்பாக முடியாது - மதுரை உயர்நீதிமன்றம்
சென்னை :
வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக உள்ளவர் சட்டவிரோத கருத்துக்கள் பதிவிட்டால் அதற்கு அட்மின் பொறுப்பாக முடியாது. அவர் குழுவின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால் இறுதி அறிக்கையில் அவர் பெயரை நீக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவர் சட்டவிரோத கருத்தை பரப்பியதால் அட்மின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கரூரை சேர்ந்தவர், தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்பட்டுள்ளது,வாட்ஸ் அப்பில் குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி,
ஆனால், பதிவுகளை முறைப்படுத்தவோ, தணிக்கை செய்யவோ அவரால் முடியாது; உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே; அவர்களது பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் அந்த குழுவின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும்; போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments