ரெகொபோத் எழுப்புதல் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா
அச்சிறுப்பாக்கம், டிச.25-
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூர் ரெகொபோத் எழுப்புதல் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கடமலைபுத்தூரில் உள்ள ரெகொபோத் எழுப்புதல் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழாவையெட்டி இயேசுபிரான் பிறப்பு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் REV ஜி.பி.ஜெய்சிங்ராபர்ட் திருச்சபையில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் 14,வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பொன்மலர் சிவகுமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் கூறி கிறிஸ்துமஸ் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
அப்போது கடமலைபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அ.ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிஆனந்தன், மற்றும் முரளி உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.
No comments
Thank you for your comments