நாளை(26-12-2021) முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் – அமைச்சர் மா.சு.,
சென்னை:
ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் எனவும். அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கும் நாளையிலிருந்து (26-12-2021) புதிய கட்டுப்பாடுகள்...
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்
அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சு. கூறியது:
அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கான கொரோனா பரிசோதனை விகிதம் 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளில் இதுவரை தோராயமாக 2 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது என்றால், அது தற்போது 10 பேராக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவருக்கும் நாளை முதல் 7 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுகிறது.
அபாயப் பட்டியலில் உள்ள நாடுகளை மட்டுமல்லாமல், அபாயப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கும் இந்த கட்டுப்பாடு நாளை முதல் (26-12-2021) பொருந்தும்.
தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுகின்றன.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். இதன் மூலம், ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7ல் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நட்சத்திர விடுகளில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். கூட்டமாக நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களும், அதில் பங்கேற்பதும் வேண்டாம்.
தமிழகத்தில் தற்போது 1,400 மெட்ரிக் டன் அளவு மருத்துவ ஆக்ஸிஜன் தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு #masubramanian #TNHealthminister #omicron #ஓமிக்ரான் pic.twitter.com/gnHAVuP8Wf
— Subramanian.Ma (@Subramanian_ma) December 25, 2021
No comments
Thank you for your comments