அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வெப்படை இளைஞர்கள்!
நாமக்கல், டிச.20-
வெப்படை பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் இலந்தகுட்டை ஊராட்சி வெப்படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் வெப்படை செல்வராஜ் முன்னிலையில் எம்ஜி.ஆர். நகர் தீர்த்தன் தலைமையில் இணைந்தபோது, உடன் ஒன்றிய அவைத்தலைவர் நடேஷ், மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தளபதி செல்வம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபிகிருஷ்ணன், ஈ.காட்டூர் கிளைக் கழக செயலாளர் கனகராஜ், சமயசங்கிலி தளபதி கோவிந்த், சமயசங்கிலி வடிவேல், மற்றும் ஓடப்பள்ளி ரமேஷ் , மோளக்கவுண்டம்பளையம் ராஜா, கவுண்டன், இலந்தகுட்டை கன்னிமார் சக்தி ஆகியோர் இருந்தனர்.
No comments
Thank you for your comments