பொத்தனூரில் டெங்கு கொசு அழிப்பு பணி தீவிரம்!
நாமக்கல், டிச.20-
பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணியும், டெங்கு கொசு அழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் தொகுதி பொத்தனூா் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட உதவித் திட்ட மருத்துவ அலுவலா் மணிவேல், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் கல்விக்கரசன், வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையிலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் களப் பணிகள் செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு தெருவிலும் புகை மருந்த்து அடிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனா். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தினா்.
களப்பணியாளா்களுக்கு பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், இளநிலை உதவியாளா் ஜெயசேகா், பொது சுகாதார மேற்பாா்வையாளா் குணசேகரன் மற்றும் சுகாதார ஆய்வாளா் ஆகியோா் அறிவுறுத்தினா்.
No comments
Thank you for your comments