கரும்பு விவசாயிகள் கருத்தரங்கம்
பாப்பிரெட்டிப்பட்டி :
கரும்பு விவசாயிகளுக்கான ஒரு டன் ரூ.5000 விலை வழங்கிடவும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவித்து வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கை வைத்து பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அனைத்து விளை பொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை C2+50 வழங்கிட மத்தியசட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் அரசுகள் விளைபொருட்களின் கொள்முதல் விநியோகத்தை பலப்படுத்திடவும், சுப்ரமணிய சிவா உட்பட சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த வேண்டும் என தருமபுரி கரும்பு விவசாயிகள் கருத்தரங்கில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொ. பொன்னுசாமி செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், சி. வஞ்சி, துணை செயலாளர், வே.விசுவநாதன். தலைவர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை. எஸ் சண்முகம், சிங்காரம் . ரவீந்திரன் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்,எம் ராஜசேகர் சுப்ரமணிய சிவா அணைத்து கட்சி விவசாய கூட்டமைப்பு செயளாலர், மல்லையன், தீர்த்தகிரி, வெங்கடாசலம், உட்பட நூற்றுக்கு மேற்பட்ட விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் எம் எஸ் பி மணிபாரதி, தருமபுரி
No comments
Thank you for your comments